பத்திரிக்கை செய்தி : ஆர்ப்பாட்டம்
இறைவனின் சாந்தி உண்டாவதாக
நபிகள் நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தார்களையும் சீண்டி பார்த்து முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசிய பா.. வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியான திருவாரூர் தெற்கு மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது மிஸ்கின் தலைமையில் இன்று (18-1-2018) மாலை 5 மணிக்கு நாச்சிகுளம் கடை தெருவில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் R.ரஹ்மத்துல்லா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் இந்து புனிதராக நினைக்கும் ஆண்டாள் குறித்த சர்ச்சை கூறிய கருத்தைப் வைரமுத்து தெரிவித்ததாக கூறி, அதை கண்டித்து பேசியுள்ள பா.. வின் தேசிய செயலாளர் எச்.ராஜா என்பவர் முஸ்லீம்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாக பேசி முஸ்லீம்களை சீண்டியுள்ளார். வைரமுத்துவை கண்டிக்கும் சாக்கில் நபிகள் நாயகத்தை உன்னால் பேச முடியுமா? அவர்களின் மனைவி மார்களை பேச முடியுமா? என்று இஸ்லாம் மார்க்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார் பா.. வின் H.ராஜா பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு அவருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கிறது.

நபிகள் நாயகத்தை பற்றி பேசியது மட்டுமல்லாமல், இந்துக்களை தூண்டும் விதமாக நச்சுக் கருத்தை வெளியிட்டு அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் பழகி வாழ்ந்து வரும் இந்து முஸ்லீம்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்க சதி செய்யும் எச்.ராஜா-வின் கொட்டம் அடக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம். மேலும் நபிகள் நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தார்களையும் சீண்டிப் பார்த்து முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசிய பாஜக-வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தனது கண்டன உரையில் பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முகம்மது சித்திக், , மாவட்ட துணை தலைவர் அன்சாரி, மாவட்ட செயலாளர்கள் சேக்அலாவுதீன், யாசர் அரஃபாத், ஜமால், அணி செயலாளர்கள் ஃபிர்தவ்ஸ், சபியுல்லாஹ், ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட பொருளார் முகம்மது அசாருதீன் நன்றியுரையாற்றினார்
இப்படிக்கு செய்தி தொடர்பாளர்,Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.