மன்னையில் மக்கள் வெள்ளம்..!!

திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக 22-4-2017 அன்று மன்னார்குடியில் காவல்ஆய்வாளர் கழனியப்பனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முகமது மிஸ்கின் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
 மன்னையை திணரடித்த மக்கள் கூட்டம் 

இதில் மாநில துணை பொது செயலாளர் தவ்பீக் மற்றும் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாட்டிறைச்சி பிரியாணி கடை நடத்தியதர்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆய்வாளரை பதவி நீக்கம் செய்யவேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யபட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், பதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்ககோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் தங்களும் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். 

சுமார் 500 நபர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த வேலையில் நமது ஜமாஅத்தின் மக்கள் சக்தியை பார்த்து காவல்துறையும், உளவுத்துறையும் ஆட்டம் கண்டது. மக்கள் திரண்டதை கண்ட உயர் அதிகாரிகள் நீங்களாக கலைந்து செல்லுங்கள், உங்களை கைது செய்ய வாகனம் இல்லை என கூறிவிட்டனர். அல்லாஹ் அக்பர்...

இதற்காக உழைத்த மற்றம் துஆ செய்த அனைத்து சகோதரர்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக...

போராட்டம் முடிந்ததும், அங்கு கிடந்த வாட்டர் பாக்கட், கப், போன்ற குப்பைகளை நமது ஜமாத் நிர்வாகிகள் அகற்றியதை கண்ட அரசு துறைகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  




Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.